2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் கைது

Super User   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.ரம்ஸான்

கல்முனை வலயக் கல்வி பணிமனையின் திட்டமிடலுக்கு பொறுப்பான  பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்தியத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னகோன் தெரிவித்தார்.

கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் பிரதி அதிபர் மீது தாக்குதல் மேற்கொண்டார் என குறித்த பிரதிக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்படிருந்தது. இதன் காரணமாக கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் இன்று செவ்வாய்க்கிழமை பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

இதன்போது பிரதி கல்விப் பணிப்பாளர் தங்கியிருந்த அதிபர் காரியாலயம் மாணவர்களினால் முற்றுகையிடப்பட்டிருந்தது. இதனையடுத்து வலய கல்வி பணிப்பாளர் மற்றும் கல்முனை பொலிஸார் விஜயம் செய்து நிலமையை கட்டு;ப்பாட்டுக்குள்  கொண்டுவர முயற்சித்தனர்.

எனினும் குறித்த பிரதிப் கல்விப் பணிப்பாளரை கைது செய்யுமாறு மாவணர்கள் வலியுறுத்தினர். இதனால் நிலைமையினை கட்பாட்டுக்கொண்டு வருவதற்காக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் கைது  செய்யப்பட்டு பாடசாலையிலிருந்து கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸ் வாகனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கல்லூரியின் பதற்ற நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதேவேளை தாக்குதலுக்குள்ளான பிரதி அதிபர் தற்போது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி:

கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் பதற்றம்

  Comments - 0

  • paathikkappaddavan Tuesday, 29 October 2013 01:52 PM

    பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .