2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சாதனையாளர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 30 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


.கே.றஹ்மத்துல்லா


பல்வேறு துறைகளிளும் சேவைகள் செய்து சாதனைகள் புரிந்த முதியோர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

சர்வதேச முதியோர் வாரத்தினையொட்டி அட்டாளைச்சேனை பிரதேச செயலக சமூக சேவைப்பிரிவு இதனை ஏற்பாடு செய்திருந்தது.

'முதியோர்கள் சமூகத்தின் தூண்கள்' எனும் கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமசேவகர் பிரிவுகள் தோறும் ஒரு சிரேஷ்ட பிரஜை தெரிவு செய்யப்பட்டு பாராட்டிக் கௌரவிக்கப் பட்டனர்.

சமூகசேவை உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அன்வர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன் மற்றும் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எம்.பி.சம்சுதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .