2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மேயர் சிராஸ் இராஜினாமா செய்யக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித், எஸ்.எம்.எம்.றம்ஸான்

கல்முனை மேயர் பதவியிலிருந்து சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா செய்யக்கூடாது என தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.கல்முனை மேயர் பதலியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு சிராஸ் மீராசாஹிபிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கேட்டிருந்தார்.

இதற்கான காலக்கெடு இன்று வியாழக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், தனக்கு வாக்களித்த சாய்ந்தமருது பிரதேச மக்களின் கருத்துக்களை கோருவதற்கான கூட்டமொன்றினை மேயர் சிராஸ் மீராசாஹிப் நேற்று புதன்கிழமை இரவு ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போதே மேயர் பதவியிலிருந்து சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா செய்யக்கூடாது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
  1. கல்முனை மேயராக சிராஸ் மீராசாஹிப் தற்போது வகித்து வரும் பதவியில் குறித்த சபையின் ஆயுட்காலம் நிறைவடையும் வரை தொடர்ந்து இருக்க எமது கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒப்புதலையும் அங்கீகாரத்தையும் வழங்க வேண்டும்.
  2. தற்போது சாய்ந்தமருதின் அரசியல் அதிகார சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள விரிசலையும் சவாலையும் எதிர்காலத்தில் பூரணமாக தவிர்த்துக் கொள்ளும் நல்லெண்ணத்தில் அடுத்து வருகின்ற உள்ளூராட்சிக்கான தேர்தலை சாய்ந்தமருது தனியான ஓர் உள்ளுராட்சி மன்றமாக நின்று சந்திக்க எமது கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  3. 35 ஆண்டுகளுக்கு பின்னர் எமது ஊருக்கு கிடைத்த மேயர் எனும்; பதவியை நாம் நிரப்பமாக அனுபவித்துக்கொள்ள எமது கட்சியின் சம்மந்தப்பட்ட தலைமைபீடத்துடன் சாய்ந்தமருது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு சுமுகமாக பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  4. சாய்ந்தமருது மக்களின் சமூக வாழ்வியலை நெறிப்படுத்துவதில் சாய்ந்தமருதின் ஜூம்மா பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபை என்றும் தனது கடமையிலிருந்து விலகிப்போன சந்தர்ப்பங்கள் கிடையாது. தற்போது எமது ஊரின் அரசியல் அந்தஸ்து சந்தித்துள்ள மேலே விபரிக்கப்பட்ட இச்சூழலை நெருக்கடியிலிருந்து ஐதாக்கி இதுகுறித்து தீர்மானங்களை சம்மந்தப்பட்டவர்களுக்கு எடுத்துரைத்து ஒரு சாதகமான தீர்வை எமது மக்களுக்கு பெற்றுத்தர நம்பிக்கையாளர் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த தீர்மானங்கள் தக்பீர் முழக்கத்துடன் கலந்து கொண்ட மக்களினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்த கூட்டத்தில் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப், மாநகர சபை உறுப்பினர்களான எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.ஆர்.அமீர், ஏ.நசார்தீன், சீ.எம்.முபீத், ஏ.எச்.எச்.நபார், கல்முனை விகாராதிபதி வண. சங்கரத்ன தேரர், சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.



  Comments - 0

  • Mr.Rahuman Thursday, 31 October 2013 03:53 PM

    உடன்பாடு ஆவணப்படுத்தப்படவில்லை என்பதற்காக அன்று ஏற்றுக் கொண்டது உடன்பாடு இல்லாமல் ஆகிவிடுமா? துரோகத்திற்கு துணைபோக தொப்பி, தாடி வைத்த மனிதர்களும் இருக்கின்றார்களா?

    Reply : 0       0

    VALLARASU.COM Friday, 01 November 2013 03:04 AM

    ஹா... ஹா... சபாஸ் மேயரே... தலைவருக்கு சரியான நெத்தியடி அடிச்சிட்டீங்க... இது இரக்காம பிரதேச சபை தலைவருக்கும் ஒரு அடிதான்... முதல் அமைச்சரை பதவி விலக சொல்ல முதுகு எலும்பு இல்லை... சிலர் ஊருக் கோழை, வீட்டில சண்டியனாம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .