2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நீதிமன்றுக்கு சமூகமளிக்காத மூவருக்கு திறந்த பிடியாணை

Super User   / 2013 நவம்பர் 07 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை,  தமண பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு மற்றும் மதுபானம் விற்பனை செய்த ஒருவர் உட்பட மூவர் நீதிமன்றில் ஆஜராகாததையடுத்து திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திறந்த பிடியாணைக்கு அம்பாறை நீதவான் எம்.எஸ்.பிரியங்கி உத்தரவிட்டுள்ளார்.

தமண இக்கல் ஓயா பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஒருவரையும் மாநகரபுர பிரதேசத்தில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவரையும் மற்றும் இலுக்குச்சேனை குளத்தில் தடைசெய்யப்பட்ட சங்கூசி வலை
பாவித்து மீன்பிடித்த ஒருவரையும் கடந்த சனிக்கிழமை தமண பொலிஸார் கைது செய்தனர்.

பொலிஸ் பிணையில் சென்ற இவர்களை நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் குறித்த மூவருக்கும் திறந்த பிடியாணை உத்தரவினை நீதவான் பொலிஸாருக்கு பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .