2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மோசடியில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2013 நவம்பர் 13 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எஸ்.எம்.முஜாஹித்

கல்முனை வாடிவீட்டு வீதியில் இயங்கிய விவசாய பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தினை நடத்தியதுடன், அதன் முகாமையாளராகவும் பணியாற்றி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் செவ்வாய்க்கிழமை (12) உத்தரவிட்டார்.

கல்முனை விவசாய பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தினூடாக முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றை குத்தகை (லீசிங்) அடிப்படையில் பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுத்து அம்மக்கள் மாதாந்தம் செலுத்திய பணத்தை தலைமைக் காரியாலயத்திற்கு செலுத்தாது தலைமறவாகியுள்ளார்.

இதனையடுத்து தலைமைக் காரியாலயத்திலிருந்து குறிப்பிட்ட வாகனங்களை பறிமுதல் செய்த போதே அம்மக்களுக்கு இவ்விடயம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட பொதுமக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன் வழக்கு தாக்கலும் செய்துள்ளனர்.

இதனால் 6 மாதங்களுக்கு மேலாக தலைமறைவாகியிருந்த குறித்த நபர் கொழும்பிலிருந்து விசேட சட்டத்தரணிகளுடன் உலங்கு வானூர்தி மூலம் நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருந்தார்.

கொழும்பிலிருந்து வருகை தந்த சட்டத்தரணிகள் குறித்த நபரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு நீதிவானிடம் கேட்டபோதும் அதனை நிராகித்த நீதிவான் குறித்த நபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .