2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வக்பு மீளாய்வுச் (நியாய) சபையின் உறுப்பினராக எம்.சீ.ஏ.அஸீஸ் தெரிவு

Kogilavani   / 2013 நவம்பர் 13 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அம்பாறை சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட சிரேஷ்ட சட்டத்தரணி எம்.சீ.ஏ.அஸீஸ் வக்பு மீளாய்வுச் (நியாய) சபையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நியமனத்தை நீதிச்சேவை ஆணைக்குழு இவருக்கு வழங்கியுள்ளது. இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஆணையாளரான இவர் சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

மூன்று பேரைக்கொண்ட இச்சபையின் தலைவராக முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி யூ.எல்.ஏ.மஜீத் மற்றும் உறுப்பினராக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.இல்யாஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .