2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக மதுபானம் விற்ற முதியவருக்கு கடூழிய சிறை

Menaka Mookandi   / 2013 நவம்பர் 14 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, பன்னலகம பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த முதியவர் ஒருவருக்கு நேற்று புதன்கிழமை அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதிபதி செல்வி எம்.எஸ்.பிரிங்கி 50 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாகச் செலுத்துமாறு உத்தரவிட்டு ஏற்கனவே 9 குற்றங்கள் செய்தமைக்காக 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட கடூழிய சிறைத் தண்டனையும் வழங்கி தீர்பளித்தார்.

தமண பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் செவ்வாய்கிழமை பிற்பகலில் பன்னலகம பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்த 62 வயது முதியவரை கைது செய்ததுடன் மதுபானப் போத்தல்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை நேற்று புதன்கிழமை அம்பாரை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி செல்வி எம்.எஸ்.பிரிங்கி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவர் இதற்கு முன்னர் இவ் குற்றங்கள் 9 பதை  புரிந்துள்ளார் என்பதையடுத்து 50 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாகச் செலுத்துமாறு உத்தரவிட்டு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட கடூழிய சிறைத் தண்டனையும் வழங்கி தீர்பளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .