2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பாசறையில் வெற்றியீட்டியவர்களுக்கு பதக்கம் அணிவிப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 15 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.கே.றஹ்மத்துல்லா


புனித ஜோவான் படையணியினரின் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டிற்கான தேசிய பாசறையில் வெற்றியீட்டிய திருகோணமலை மாவட்ட படையணியிற்கான தங்கப்பதக்கம் அணிவிப்பும் பாரட்டு நிகழ்வும் நேற்று முன்தினம் புதன்கிழமை புனித ஜோசப் கல்லூயில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் திருக்கோணமலை மாவட்ட புனித ஜோவான் படையின் புதிய மாவட்ட ஆணையாளர் பதவியேற்றதுடன் முன்னாள் மாவட்ட ஆணையாளருக்கான பிரியாவிடை வைபவமும் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் திருக்கோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் வே.விஜேந்திரன், மாகாணசபை உறுப்பினர் சி.தண்டாயுதபாணி, ஜெ.ஜெனார்த்தனன், புனித ஜோவான் படையணி செயற்குழுத் தலைவர் சு.ரட்ணவடிவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .