2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கல்முனை மாநகர சபையின் புதிய முதல்வர் திங்கட்கிழமை பதவியேற்பு

Kogilavani   / 2013 நவம்பர் 15 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

கல்முனை, மாநகர சபையின் புதிய  முதல்வராக சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்  எதிர்வரும்  18 ஆம் திகதி  திங்கட்கிழமை பதவி ஏற்;க உள்ளார்.

இவர், எதிர்வரும் திங்கட்கிழமை காலை கௌரவிப்புடன் ஊர்வலமாக கல்முனைக்குடி ஜும்மா பள்ளியில் இருந்து அழைத்து செல்லப்பட்டு கல்முனை  மாநகர சபையில் தனது முதல்வர் பதவியை பொறுப்பேற்க்க உள்ளார்.

இந்த கௌரவிப்பு,  ஊர்வல ஏட்பாடுகளை கல்முனையில் உள்ள சமுகசேவை அமைப்புகள், பள்ளிவாசல் அமைப்புகள், விளையாட்டு கழகம்கள், வர்த்தக அமைப்புகள் போன்றன ஏட்பாடு செய்துள்ளன.

இதேவேளை எதிர்வரும் 24ஆம் திகதி சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்  கல்முனையில் பொதுக்கூட்டம் ஒன்றையும் நடத்த உள்ளதாகவும், இக்கூட்டத்தில் நிதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்மான  றவூப்  ஹக்கீம்  கலந்துகொள்ள உள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .