2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விழிப்பூட்டல் செயலமர்வு

Kogilavani   / 2013 நவம்பர் 15 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்


'திவி நெகும' அபிவிருத்தித்  திணைக்களம்  ஸ்தாபிப்பது  தொடர்பாக சமுர்த்தி  சிறு  குழுக்கள்  மற்றும்  மக்கள்  கட்டமைப்புக்களுக்கு விழிப்பூட்டும்  செயல்லமர்வு  இன்று கல்முனை இஸ்லாமாபாத் பல்தேவை கட்டிடத்தில் இடம்பெற்றது .

இதில்  கல்முனை நகர், இஸ்லாமாபாத் பிரதேசங்களில் வாழும் சமுர்த்தி சிறு  குழுக்கள்  மற்றும்  மக்கள்  கட்டமைப்புக்களின் பிரதிநிதிகள்  கலந்துகொண்டனர்.

சமுர்த்தி தலைமைப்பீட  முகாமையாளர்  எ.ஆர்.எம். சாலிஹ்  தலைமைல் இடம்பெற்ற  இந்நிகழ்வில்  சமுர்த்தி  அதிகார சபையின் ஆலோசகர்  எஸ்.நடேசராஜா,  கல்முனை  பிரதேச செயலாளர்  எம்.எம்.நௌபல், மாவட்ட சமுர்த்தி  இணைப்பாளர்  ஐ.அலியார், பிரதி  திட்டமிடல் பணிப்பாளர்  ரி.மோகனக்குமார், சமுர்த்தி வலைய, வங்கி முகாமையாளர் எ.சி.அன்வர் உட்பட  சமுர்த்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .