2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கஞ்சா விற்பனை செய்த நபருக்கு தண்டப்பணம் விதிப்பு

A.P.Mathan   / 2013 நவம்பர் 15 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா
 
கஞ்சா விற்பனை செய்தமை தொடர்பில் ஆஜர்படுத்தப்பட்ட நபருக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் ரூபா 20,400 தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்தார்.
 
2010ஆம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்த குற்றத்தின் பேரில் அக்கரைப்பற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு உயர் நீதிமன்றத்தின் பிணையில் சென்றிருந்தார்.
 
இந்த நபர் தொடர்பான குற்றப் பிரேரணையினை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை தாக்கல் செய்தபோதே நீதவான் ரீ.சரவணராஜா, தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்தார்.
 
மேற்படி நபர் கஞ்சா விற்பனை செய்தமை, 10 கிராம் கஞ்சா மற்றும் சட்டவிரோத சிகரெட்டுக்களை தம்வசம் வைத்திருந்தமை ஆகிய மூன்று குற்றங்கள் தொடர்பான வழக்கில் குற்றங்களை ஏற்றுக் கொண்டார்.
 
இதேவேளை கஞ்சா வைத்திருந்தன் பேரில் கைதுசெய்யப்பட்டு நேற்றுமுன்தினம் புதன்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய இருவருக்கு தலா ரூபா 8,000, ரூபா 6,000 வீதம் நீதிவான் ரீ.சரவணராஜா, தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்தார்.
 
அக்கரைப்பற்று பொலிஸ் சார்ஜன் யூ.எல்.ஆப்தீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது அக்கரைப்பற்று, ஆலங்குளம் ஆகிய பிரதேசங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .