2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

துப்பாக்கியுடன் இருவர் கைது

Kogilavani   / 2013 நவம்பர் 15 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்,எஸ்.சரவணன்

கல்முனை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேசத்தில் வைத்து சம்மாந்துறையை சேர்ந்த இருவர் துப்பாக்கியுடன் மருதமுனை விசேட அதிரடிப்படையினரால்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை, விளினயடியை சேர்ந்த 32 வயதுடைய நபரும் முச்சக்கரவண்டி சாரதியுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து எஸ்.எல்.ஆர் ரக துப்பாக்கி ஒன்றும், ரவைக்கூடு ஒன்றும், 27 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்  கைது சய்யப்பட்டவர் விசேட அததிரடிப்படயினரால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கல்முனை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .