2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பொத்துவில் பி.ச.வரவு,செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

பொத்துவில் பிரதேச சபையின் 2014 ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம்; சபையில் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியிலுள்ள பொத்துவில் பிரதேச சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட போது ஒரு மேலதிக வாக்கினால் தோற்றக்கடிக்கப்பட்டது.

இதனை அடுத்து கட்சியின் தலைவரும், அமைச்சருமான றவூப் ஹக்கீம் பிரதேச சபை உறுப்பினர்களை கொழும்புக்கு அழைத்து சமரச பேச்சுவார்த்தையினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது வரவு, செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படுவது கட்சிக்கே அபயகீர்த்தியை ஏற்படுத்தும் எனவும் இது எதிர்காலத்தில் ஆரோக்கியமற்ற ஒரு செயற்பாட்டுக்கு வழிசமைக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, சபையின் தவிசாளர் எதிர்காலத்தில் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படும் வளப் பங்கீடுகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்ககைளில் உறுப்பினர்களின் ஆலோசனையினையும், பங்கு பற்றுதலையும் பெற்றுக் கொள்ளுமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டு சமரச முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், மேற்படி பிரதேச சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இரண்டாவது தடவையாகவும் திங்கட்கிழமை (2) சமர்பிக்கப்பட்டதுடன் இதனை ஆளும் தரப்பு உட்பட எதிர்கட்சிகளும் ஆதரித்தன. 

  Comments - 0

  • ooran Wednesday, 04 December 2013 06:35 AM

    ஒப்பந்த வேலை செய்யும் பணத்தின் மீது கரிசனை கொண்டவர்களை அரசியலில் தலைவர்களாக்கினால் இதுதான் நிலை. கட்சியைக் காட்டி தன்மானத்தை மறைக்க பாதீட்டை வெற்றியடையச் செய்து விட்டாரோ? இந்த முஸ்லிம்களின் தலைவர். கட்சிக்கு வாக்களிப்பது ஏழை மக்கள். அரசோடு முரண்பாட்டை வளர்ப்பது இந்தத் தலைவர். கடைசியில் அவர் அரசுடன் இருப்பார். பாவம் இந்த ஏழை மக்கள் ஆளும் கட்சி அங்கத்தவர்களை நிர்வாகம் செய்ய முடியாத இந்தப் பிரதேச சபைத் தலைவருக்கு எவ்வாறு ஊர்மக்களை நிர்வாகம் செய்ய முடியும்? கேட்டால் நான் காசு கொடுத்து வந்தவன் என்று மார்பு தட்டிச் சொல்வாரோ? மக்களே எதிர்காலம் பற்றி சிந்திப்போம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X