2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நாவிதன் வெளி பிரதேச சபையின் உப-தவிசாளர் தமிழரசு கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

நாவிதன் வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் அமரதாச ஆனந்தன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பொறுப்பில் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

2013 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் திகதியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிராக கட்சியினால் ஒழுக்;காற்று நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் மாவை எஸ்.சேனாதிராஜா கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது .

"2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாவிதன்வெளி பிரதேச சபைக்கான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் நீங்கள்  கையெழுத்திட்டுத் தேர்தலில் போட்டியிட்டு  வெற்றிபெற்று நாவிதன்வெளி பிரதேசசபையின் ஆட்சி நிர்வாகப் பொறுப்பை ஏற்ற பொழுது உப தவிசாளராக நியமிக்கப்பட்டீர்கள்.

ஆனாலும்  அதன்பின் எமது கட்சியினாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதன்பின் நடைபெற்ற தேர்தல் காலங்களிலும் எமது நடவடிக்கைகளில் தாங்கள் தன்னிச்சையாகவே செயட்பட்டு வந்துள்ளீர்கள்  என்பதை நேரில் அவதானித்திருக்கின்றோம்.

அத்தகைய நடவடிக்கைகள் பற்றி அவ்வப்போது எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அதேவேளை நாவிதன் வெளி பிரதேச சபையில் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் நோக்கில் உறுப்பினர்களிடம் எதிரணி உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டுவதில் ஈடுபட்டுவருவது தங்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதற்கே இட்டுச் செல்லும் என்பதனை தெரியத்தருகின்றேன்.

ஒட்டு மொத்தமாக நாவிதன் வெளி பிரதேச சபையின் சுமூகமான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு விரோதமாகவும் செயற்பட்டுவரும் தங்களை 22.11.2013 முதல்  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் எனும் பொறுப்பில் இருந்து இடை நிறுத்தப்படுகிறீர்கள் என இத்தால் அறியத்தருகின்றதுடன் இந்த நடவடிக்கை தொடர்ச்சியாக எமது கட்சியினால் ஒழுங்கு நடவடிக்கைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  Comments - 0

  • A.Sutharson Tuesday, 03 December 2013 12:58 PM

    இது தான் இவர்கல் ஜனநாயகம்

    Reply : 0       0

    Iya Thursday, 05 December 2013 01:12 PM

    பொடியப்பு பியசேன = அமரதாச ஆனந்தன்
    துரோகிகள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X