2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பொலிவேரியன் கிராம மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

Super User   / 2013 டிசெம்பர் 08 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்


சாய்ந்தமருது, பொலிவேரியன் கிராம மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளுக்கு கூடிய விரைவில் தீர்வு பெற்றுத் தருவதாக கல்முனை மேயர் நிசாம் காரியப்பர் உறுதியளித்துள்ளார்.

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென சாய்ந்தமருது கரைவாகு வட்டை பிரதேசத்தில் ஏற்படுத்தப்பட்ட பொலிவேரியன் கிராமத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக கல்முனை மேயர் நேரடி விஜயமொன்றை மேற்கொண்டு மக்களுடன் கலந்துரையாடினார்.

இதன்போதே மேற்கண்ட உறுதிமொழியை அவர் வழங்கினார். இப்பகுதியில் குப்பை கொட்டுவதால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பிரச்சினைகள், ஆற்று நீர் சீரான ஓட்டமினமையால் ஏற்பட்டுள்ள வெள்ள அபாயம், யானைகளின் அச்சுறுத்தல், நடை பாதையில் மாடுகள் அறுக்கப்படும் முறையற்ற செயற்பாடு உட்பட பல முக்கிய விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டன.

அத்துடன் இந்த பிரச்சினைகளை முடியான வரை நிவர்த்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை மேயர் பணித்ததுடன் அதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார். இந்த விஜயத்தில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஸீர், ஏ.எம்.றியாஸ் மற்றும் ஏ.எம்.பரக்கத்துல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X