2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மருதமுனை உலமா சபையின் தலைவராக ஹுசைனுதீன் (றியாழி) தெரிவு

Super User   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருதமுனை உலமா சபையின் தலைவராக அஷ்ஷெய்க் ஹுசைனுதீன் (றியாழி) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.மருதமுனை உலமா சபையின் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு நேற்று ஞாயிற்றுக்கிழமை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி தலைமையில் இடம்பெற்றது.

மருதமுனை அந்-நகுலா அரபுக் கல்லுாரியில் இடம்பெற்ற நிர்வாக தெரிவிற்கு உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பின் ஊடாகவே தெரிவு செய்யப்பட்டனர். இதன் அடிப்படையில் அஷ்ஷெய்க் ஹுசைனுதீன் றியாழி தலைவராகவும் அஷ்ஷெய்க் ஏ.ஆர்.எம்.சுபைர் நளீமி செயலாளராகவும் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.மன்சூர் பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

வாக்கெடுப்பின் படி அடுத்தடுத்த இடங்களை பெற்றவர்கள் ஒழுங்கில் உப தலைவர்களாக சிரேஸ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ஜலால்டீன் கபூரியும் சிரேஸ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ஜெலீல் காமியும் தெரிவானதுடன் உப செயலாளராக அஷ்ஷெய்க் கியாஸ் காபிசும் தெரிவாகினர்.

இந்த தெரிவின்போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.முபாறக் மதனி, பொருளாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.கலீல் மௌலவியும் அம்பாறை மாவட்ட உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஆதம்பாவா மதனி உள்ளிட்ட பலர் பிரசன்னமாகி இருந்தனர். இச்சபை அடுத்த மூன்று வருடங்களுக்கு  செயற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X