2025 ஜூலை 14, திங்கட்கிழமை

விபத்தில் 16 வயது சிறுவன் பலி 2பேர் படுகாயம்

Thipaan   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

திருக்கோவில் பொலிஸ்பிரிவுலுள்ள தம்பிலுவில் பிரதான வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை (24) இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில், தம்பிலுவில் முதலாம்பிரிவு வம்மியடி வீதியைச் சேர்ந்த வரதராஜன் வேஷான்(வயது 16) என்ற சிறுவனே பரிதாகரமாக உயிரிழந்துள்ளார்.

திருக்கோவிலில் இருந்து தம்பிலுவிலுள்ள தனது வீட்டுக்கு  நேற்று மாலை 4 மணியளவில் வேகமாக சென்ற சிறுவன், தம்பிலுவில் இலங்கை வங்கிக்கு அருகாமையிலுள்ள வீதிவளைவில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மதில் ஒன்றுடன் மோதியுள்ளான்.

இதனையடுத்து,  அக்கரைப்பற்றில் இருந்து திருக்கோவிலை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பிரயாணம் 2பேர்  படுகாயமடைந்தனர்.
 
அதனையடுத்து படுகாயமடைந்த சிறுவன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 

இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .