2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஜலால்டீன்புரம் வீதியை புனரமைக்குமாறு மக்கள் விசனம்

Thipaan   / 2015 ஏப்ரல் 25 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அம்பாறை மாவட்டம் சின்னப் பாலமுனை ஜலால்டீன்புரம் வீதியானது நீண்ட காலமாக, மிகவும் சேதமடைந்து காணப்படுவதால், அந்த வீதி வழியாக போக்குவரத்தில் ஈடுபடும் தாம் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருதாக அப்பகுதி மக்கள்  விசனம் தெரிவிக்கின்றனர்.

சின்னப் பாலமுனை கடற்கரையிலிருந்து ஆரம்பித்து, பாலமுனை பிரதான வீதியுடன் இணையும் சின்னப் பாலமுனை ஜலால்டீன் புரம் வீதியின் ஒரு பகுதி, மிகவும் சேதமுற்றுக் காணப்படுகின்றபோதும் இந்த வீதியினை புனரமைப்புச் செய்வதில் உரிய அதிகாரிகள் எவரும் அக்கறை காட்டவில்லை என்று, இந்தப் பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அதிகமான கடற்றொழிலாளர்களும் மீன் வியாபாரிகளும் தமது தொழில் நிமித்தம், இந்த வீதியினூடாக தினமும் பயணித்து வருகின்றனர்.

ஆயினும், இந்தப் பாதையைக் கடந்து செல்வதில் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கின்றனர்.  

ஒலுவில் மீனவர் துறைமுகத்துக்கு சில நூறு மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள இந்த வீதியில், பாரிய ஐஸ் தொழிற்சாலையொன்றும் உள்ளது. சின்னப் பாலமுனை கடற்கரை சிறுவர் பூங்காவுக்குச் செல்வதற்கான பிரதான வழியாகவும், இந்தப் பாதையே காணப்படுகிறது.

இவ்வாறான வீதியானது, மிக மோசமாகச் சேதமுற்றுள்ளபோதும், அதனை இதுவரை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கண்டும் காணாமல் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, மக்கள் போக்குவரத்துக்கு மட்டுமன்றி, கடற்றொழிலாளர்களின் வர்த்தகத்தோடும் தொடர்புபட்டுள்ள சின்னப் பாலமுனை ஜலால்தீன் புரம் வீதியினை, உரிய அதிகாரிகள் மிக விரைவில் புனரமைப்புச் செய்ய வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

                                                                                                                                                                                                                                                                         


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .