2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சலுகை விலையில் உரம் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்

Sudharshini   / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக விவசாய நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகளுக்கான சலுகை விலையில் உரம் விநியோகிக்கும் பணிகள் தற்போது அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உரம் தேவைப்படும் விவசாயிகள் உரம் பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கைப் படிவத்தினை முறையாக பூர்த்தி செய்து தமது காணிக்குரிய கமக்காரர் அமைப்பினூடாக பெரும்போக உத்தியோகத்தரிடம் கையளிக்க வேண்டுமென பணிக்கப்பட்டுள்ளது.

இதற்கான படிவம் கமக்காரர் அமைப்புக்களினால் விவசாயிகளுக்கு கட்டணமின்றி இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த காலங்களைப் போலல்லாது இம்முறை உரிய காலத்தில் உரத்தை விநியோகிக்க வேண்டுமென விவசாயிகள் சம்மந்தப்பட்ட தரப்பினரிடம் விடுத்த கோரிக்கையை ஏற்று இம்முறை உரவிநியோகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த போகங்களில் அதிகாரிகள் கமக்காரர் அமைப்புக்கள் நிர்வாகிகள் முறையாகச் செயற்படாததன் காரணமாக விவசாயிகள் உர தனியார் விற்பனை நிலையங்களை நாட வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை சிறு போக விவசாயிகளுக்கு உரிய காலத்தில் உரத்தினை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள் நிர்வாகிகள் மற்றும் கமக்காரர் அமைப்புக்களுக்கு விவசாயிகள் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .