Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
நவீன உலகுக்கு ஏற்றவாறு மக்களுக்கு வினைத்திறனுடனும் விரைவாகவும் சேவையை வழங்கும் பொருட்டு, அரச அதிகாரிகளுக்கு அரசாங்கத்தினால் நிர்வாக ரீதியான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுத்துள்ளதாக கிழக்கு மாகாண மற்றும் உள்ளூராட்சி கிராமிய கைத்தொழில், போக்குவரத்து சுற்றாடல் அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ் தெரிவித்தார்.
மூன் பிறைட் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இலங்கை நிருவாக சேவை அதிகாரி எம்.ஐ. சலாஹுதீனால் தொகுக்கப்பட்ட பொது நிருவாக தாபன வேலைகளுக்கான வழிகாட்டல் எனும் நூல் அறிமுக விழா சனிக்கிழமை (25) அட்டாளைச்சேனை பல நோக்கு கூட்டுறவுச் சங்க கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
மூன் பிறைட் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எம்.எஸ்.எம். ஜௌபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஏறக்குறைய நான்கு தசாப்த கால அரச சேவையின் அனுபவங்களைக் கொண்ட இவரது இத்தொகுப்பானது, ஓர் அரச ஊழியர் அறிந்திருக்க வேண்டிய அனைத்து தாபன விடயங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
இப்பணியை சிறப்புற தொகுத்து நூலுருவாக்கிய நூலாசிரியரை பாராட்டுகின்றேன். நாளுக்கு நாள் அரச நிர்வாக சேவையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இக்கால கட்டத்தில் அரச அதிகாரிகளும் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இன்று சகல துறைகளும் நவீன மயப்படுத்தப்பட்டு அவற்றின் செயற்பாடுகளும் அவற்றின் வெளியீடுகளும் தொழில்நுட்ப உள்ளீடுகளினூடாக விரைவுபடுத்தப்பட்டு வருகின்றது. இதற்கீடாக அரச துறையும் புதிய மாற்றங்களையும் உள்வாங்கி மக்கள் சார்ந்த சேவைகளை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டுமென்றார்.
இந்நிகழ்வில் மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம். இர்ஸாத் மற்றும் பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
3 hours ago