Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாலமுனை மத்திய குழுவின் வேண்டுகோளின் பேரில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீமின் ஏற்பாட்டில் 09 பேருக்கு இலங்கை போக்குவரத்துச் சபையில் சாரதி மற்றும் நடத்துனர்களுக்கான நேர்முகப்பரீட்சைக்கான கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளது.
நேர்முகப்பரீட்சைக்கான கடிதம் வழங்கும் நிகழ்வு மத்திய குழுவின் தலைவரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் தலைமையில் சனிக்கிழமை (25) மாவட்டக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது நேர்முகப்பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கட்சியின் கிளைக்குழுக்களின் தலைவர் மற்றும் செயலாளர்களினால் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.
பாலமுனை மத்திய குழுவின் தலைவரும் அமைப்பாளருமான எம்.ஏ.அன்ஸிலின் பெரும் முயற்சியின் காரணமாக பாலமுனைப் பிரதேசத்தில் கட்சிக்காக பங்களிப்புக்கள் செய்த பல இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புக்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
இங்கு உரையாற்றிய அமைப்பாளர் எம்.ஏ.அன்ஸில் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமிற்கு நன்றி தெரிவித்ததுடன் கடந்த காலங்களிலும் பாலமுனைப் பிரதேசத்தில் கூடுதலான இளைஞர்களுக்கு இலங்கை போக்குவரத்துச் சபையில் தொழில்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கட்சிக்காக தியாகம் செய்தவர்களை மத்திய குழு கௌரவித்து வருகின்றது. கிளைக்குழுக்களின் சிபாரிசில் தொழில்வாய்ப்புக்களை வழங்கி வருகின்றோம். எதிர்காலத்திலும் வழங்குவோம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
3 hours ago