Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் எதிர்நோக்கப்படும் காணிப்பயன்பாட்டு நிர்வாகப் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்தி புத்த சாசன பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஞாயிற்றுக்கிழமை (26) மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் ஏ.சி.எம். ஷயீட் தெரிவித்தார்.
சம்மேளனத்தினால் புத்த சாசன பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கரு ஜயசூரியவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்த நிலப்பரப்பில் மிகக்கூடிய சன அடர்த்தி கொண்டது ஏறாவூர் நகர பிரதேச செயலகப்பிரிவாகும்.
2014ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி இங்கு 10,931 குடும்பங்களைச் சேர்ந்த 38,271 பேர் வாழ்கின்றார்கள். இது ஒரு சதுர கிலோமீற்றருக்கு 10,233 என்ற சனத்தொகை அடர்த்தியில் காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டம் 2,633.10 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பைக் கொண்டிருக்கையில், ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவு 3.74 சதுர கிலோமீற்றர் பரப்பை மாத்திரம் கொண்டுள்ளது. இது இந்த மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 0.14 சதவீதமாகும்.
1990ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இனக்கலவரத்தின் விளைவாக ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலகப் பிரிவிலிருந்து ஏறாவூர் நகர பிரதேச செயலகப்பிரிவு புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டது.
ஆயினும் அன்றிலிருந்து இன்றுவரை ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தால் நிருவகிக்கப்படுகின்ற 5 கிராம சேவையாளர் பிரிவுகளின் காணி நிர்வாக அதிகாரம், இப்பொழுதும் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.
இது ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவுக்கு காணிப்பயன்பாடு தொடர்பான பல்வேறு நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளது.
எனவே, ஏறாவூர் பற்றுப் பிரதேச செயலகத்தினால் காணி அதிகாரமளிக்கப்பட்டுள்ள அதேவேளை ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற மிச்நகர், மீராகேணி, ஐயன்கேணி, தாமரைக்கேணி, ஹிதாயத் நகர் ஆகிய கிராமங்களின் காணிப் பயன்பாட்டு நிர்வாக அதிகாரங்களும் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்துக்கே வழங்கப்பட வேண்டும்.
இதுவே, இப்பகுதிகளில் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்துக்கும் சகவாழ்வுக்கும் வழிவகுக்கும்.
இத்தகைய நிர்வாக ரீதியான சிக்கல்களை சில தீய சக்திகள் தமக்கு வாய்ப்பாக பயன்படுத்தி மீண்டும் இப்பகுதிகளில் இனக்கலகத்தை தோற்றுவிக்க இடமளிக்கப்படக்கூடாது என்பதால் உடனடியாக இந்த சிக்கல் தீர்த்து வைக்கப்படவேண்டும்.
இந்தக் கிராமங்களில் வசிக்கும் சுமார் 4,169 குடும்பங்களைச் 15,312 பேரின் காணி உரிமைகள் கவலையளிப்பதாக உள்ளது.
ஏறாவூர் பற்றுப் பிரதேச செயலக நிர்வாகத்துடன் சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ள ஐந்து கிராமங்களையும் சேர்ந்த மக்கள் பூர்வீகமாக நூற்றாண்டு காலம் அப்பகுதிகளிலேயே வாழ்ந்து வருபவர்கள்.
எனவே அவர்களது பூர்வீகமும் வாழ்வாதாரமும் நிலபுலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சம்மேளனம் அனுப்பி வைத்துள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரதிகள் காணியமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தன, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோ, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் சறோஜினிதேவி சார்ள்ஸ் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
59 minute ago
3 hours ago