2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

அஞ்சல் திணைக்களத்தை அபிவிருத்தி செய்ய திட்டம்

Kogilavani   / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அஞ்சல் திணைக்களத்தை மேலும் அபிவிருத்தி செய்து மக்களுக்கு விரைவாகவும் சிறப்பாகவும் சேவையை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் ஆர்.எம்.எம்.ரூபசுந்தரபண்டா தெவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் பிரிவுக்கான செயற்பாட்டு செயலணியை ஸ்தாபிக்கும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை(26) காரைதீவு அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் அலுவலக பிரதம எழுது வினைஞர் யூ.எல்.எம்.பைஸர் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் அஞ்சல் அத்தியட்சகர் ஆர்.எம்.எம்.ரூபசுந்தரபண்டா தொடர்ந்து உரையற்றுகையில்,
திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களுக்கு திணைக்களம் சார்ந்த தொழிற்சங்கங்களும் உத்தியோகத்தர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் திணைக்களத்தின் இலக்கை அடைவதோடு சிறந்த சேவையையும் வழங்க முடியும்.

அஞ்சல் திணைக்களத்தில் நாடு தழுவிய ரீதியில் தபால் மா அதிதிபதியினால் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாட்டு செயலணியை ஸ்தாபிக்கும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அம்பாறை, அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களில் செயற்பாட்டு செயலணியை ஸ்தாபிக்கும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு தொழிச் சங்கங்களின் பங்களிப்பு இன்றியமையாததாக காணப்படுகின்றது.

செயற்பாட்டு செயலணி மூலம் அஞ்சல் சேவையை முன்னேற்றுவது தொடர்பான வேலைத் திட்டங்கள் இனங்காணப்பட்டு இதன்மூலம் எதிர்காலத்தில் அவ்வேவைத் திட்டங்கள்  தபால் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும்' என்றார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண நிர்வாக உத்தியோகத்தர் எம்.தம்பிஐயா மற்றும் தபால் அதிபர்கள், அஞ்சல் திணைக்கள தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசணைகளை முன்வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .