Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆரம்பப் கல்விப்பாட விடயங்களுக்கான டிப்ளோமாதாரிகளின் கோரிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் திங்கட்கிழமை(27) தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
கிழக்கு மாகாணத்திலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகளிலிருந்து டிப்ளோமாக் கற்கை நெறியை பூர்த்தி செய்துள்ள டிப்ளோமாதாரிகள் அடுத்த மாதம் வழங்கப்படவுள்ள ஆசிரியர் நியமனத்தின்போது தங்களை கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பில் டிப்ளோமாதாரிகளின் பெற்றோரும் எனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
இதன் நிமித்தம், இக்கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தி குறித்த டிப்ளோமாதாரிகளை மேற்படி மாகாண பாடசாலைகளில் நியமிக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் அஹமட் நசீரை தொடர்பு கொண்டு கேட்டோம்.
கிழக்கை பிறப்பிடமாகக் கொண்ட டிப்ளோமாதாரிகள் கடந்த வருடம் ஊவா, மத்தி மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டதாகவும் இதனால் ஒரு சில டிப்ளோமாதாரிகள் கடந்த வருடம் தொழில்வாய்ப்பை இழந்ததாகவும் அறிய முடிகிறது.
கிழக்கு மாகாண பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவுக்கான வெற்றிடங்கள் காணப்படாத காரணத்தினால் இவர்கள் வெளி மாவட்டங்களில் நியமனம் பெற்று சென்றதாக அறியமுடிகிறது.
இருப்பினும் கல்வி அமைச்சின் புள்ளி விபரங்களின் பிரகாரம் மேற்படி மாகாணப் பாடசலைகளில் ஆரம்பப் பிரிவுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக பத்திரிகைச் செய்தியொன்றில் காணக்கிடைத்தது.
இந்நிலையில், கல்வி அமைச்சினால் எதிர்வரும் மே மாதம் டிப்ளோமாதாரிகளுக்கான ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
இந்நியமனங்களின்போது கிழக்கை பிறப்பிடமாகக் கொண்ட டிப்ளோமாதாரிகள் கிழக்கு மாகாண பாடசாலைகளில் நியமிக்கப்பட வேண்டும்.
அதற்கான உரிய நடவடிக்கைகள் ஏக காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று கருதியே இவ்விடயத்தை மாகாண முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாக மாகாண உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
3 hours ago