2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

முள்ளிக்குளத்து மலை பிரதேசத்தில் காட்டு யானைகள் புகுந்ததால் பரபரப்பு

Thipaan   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அம்பாறை, பாலமுனை ஹிறா நகர் மிள் குடியேற்றக் கிராமத்தை அண்டிய முள்ளிக்குளத்து மலை பிரதேசத்தில் காட்டு யானைக் கூட்டமொன்று திங்கட்கிழமை (27) மாலை வேளையில் உலாவியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தப் பிரதேசத்தில் சுமார் 10க்கு மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக காணப்பட்டதால் அவற்றைப் பார்ப்பதற்கு அங்கு பெருமளவிலான மக்கள் திரண்டிருந்தனர்.

பாலமுனை ஹிறா நகர் மீள்குடியேற்ற கிராமத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஒலுவில் அஷ்ரப் நகர் திண்மக் கழிவு சேகரிக்கும் நிலையப் பகுதியில் அண்மைக்காலமாக பெரும் எண்ணிக்கையிலான யானைகள் நடமாடுவதைக் காணமுடிகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .