Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மேச்சல் தரை ஒதுக்கீடு மற்றும் விலங்கு வேளாண்மை தொடர்பான கலந்துரையாடல், மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி தலைமையில் பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் திங்கட்கிழமை (27) நடைபெற்றது.
இதன்போது, மேச்சல் தரை ஒதுக்கீடு, கால்நடை பண்ணையாளர் சங்க பதிவுகள், காட்டுயானை வேலி, குளங்கள் புனரமைப்பு போன்ற அபிவிருத்திச் செயற்பாடுகள்; பற்றி கலந்தாலோசிக்கப்பட்டன.
இக்கலந்துரையாடலில், பிரதேச விவசாயிகள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாயம், கால்நடை உற்பத்தி அபிவிருத்தி அமைச்சர் கே. துரைராசசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எஸ். துரைரெட்ணம், வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி, திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஆர். கங்காதரன், கமநல சேவைகள், கால்நடை உற்பத்தி சுகாதாரம், வனபரிபாலனம், சுற்றாடல் அதிகாரசபை கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸாரும் பண்ணையாளர்களும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .