2025 ஜூலை 09, புதன்கிழமை

தௌஹீத் ஜமாஅத்தினரின் மார்க்க விளக்க மாநாடு

Gavitha   / 2015 மே 03 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்ட தௌஹீத் ஜமாஅத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட மார்க்க விளக்க மாநாடு ஏறாவூர் தௌஹீத் ஜும்மாப் பள்ளிவாயலில் ஞ இடம்பெற்றது.

'தனிமனித வாழ்வில் நற்கருமங்களால் கிடைக்கும் பலாபலன்கள், இயற்கையை அனுபவித்துக் கொண்டு படைத்த இறைவனை நோக்கி, நவீன மீடியாக்களும் நாமும்' போன்ற இன்னும் சில விடயதானங்களை உள்ளடக்கியதான தலைப்புக்களில் சொற்பொழிவுகள் இடம்பெற்றன.

எம்.இஷற்.எம். மஸீர், ஏ.ஆர்.எம். அர்ஹம், எம். அஸ்மி ஸாலிஹ், பி.எம். ஜாபிர் ஆகியோர் இந்த முழு நாள் மாவட்ட மாநாட்டில் சொற்பொழிவாற்றினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேசத்திலிருந்தும் தௌஹீத் ஜமா அத்தைப் பின்பற்றுவர்களும் ஏறாவூர் அல்-மர்க்கஸுல் இஸ்லாமியின் மாணவர்களும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .