2025 ஜூலை 09, புதன்கிழமை

நாவிதன்வெளியில் தையல் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

Sudharshini   / 2015 மே 04 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அரசின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ், நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சினால் தையல் பயிற்சி நிலையம் ஞாயிற்றுக்கிழமை (03) திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஏ.லத்தீப் தலைமையிலான குழுவினர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டதுடன் புதிதாக திறக்கப்பட்ட தையல் பயிற்சி நிலையத்துக்கான ஆசிரியை மற்றும் காவலாளி பதவிகளுக்கான நியமனக் கடிதமும் இதன்போது கையளிக்கப்பட்டன.

இத் தையல் பயிற்சி நிலையத்தில் முதற்கட்டமாக 20 யுவதிகளுக்கு தையல் டிப்ளோமா பயிற்சி வழங்கப்படவுள்ளது.
 
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்தியமுகாம்,  சவளக்கடை பிரதேச அமைப்பாளர் எம்.எச்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட், கிழக்கு மாகாண அமைப்பாளர் அன்வர் முஸ்தபா, இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சித்தீக் நதீர், அமைச்சின் இணைப்பாளர் சீ.எம்.ஹலீம், அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள், மகளிர் அபிவிருத்தி சங்க அங்கத்தவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .