Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Gavitha / 2015 மே 04 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
அம்பாறை - இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரி பாடசாலை அபிவிருத்தி சபையினருக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீருக்கும் இடையில் ஒரு முக்கிய சந்திப்பொன்றும் மகஜர் கையளிக்கும் நிகழ்வும் திங்கட்கிழமை (04) கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் உத்தியோகபூர்வ அட்டாளைச்சேனை காரியாலயத்தில் இடம்பெற்றது.
மாகாண சபை உறுப்பினரின் இறக்காமம் மக்கள் தொடர்பாடல் அதிகாரி கே.எல்.சமீம் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, இறக்காமம் பாடசாலை அபிவிருத்தி குழுவினர் பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் பாடசாலைத்தேவைகள் தொடர்பான கருத்துக்களை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரிடம் முன்வைத்தனர்.
மேலும் இப்பாடசாலை சம்மாந்துறை வலய இறக்காமம் கோட்டத்திலுள்ள 1AB தரத்தையுடைய ஒரு மூலாதாரப் பாடசாலையாகும். இப்பாடசாலையில் 6 - 13 வரை சுமார் 1,000 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
அது மாத்திரமல்லாமல் இப்பிரதேசத்திலுள்ள ஏனைய கிராமங்களின் மாணவர்களும் இப்பாடசாலையில்தான் உயர்கல்வியை கற்பதற்காக நம்பி வருவதாகவும் இப்பாடசாலையில் நிலவும் சில குறைபாடுகள் காரணமாக அங்கு கல்விகற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் நிருவாக நடவடிக்கைகளுக்கும் பெரும் சவாலாக உள்ளது என்றும் இக்குழுவினர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நஸீர் கருத்து தெரிவிக்கையில்,
கல்வி நடவடிக்கைகளுக்கு மட்டுமல்ல மார்க்க விடயங்களுக்குமாக நான் என்றும் உயிர் ஊட்ட விரும்புபவன். அதற்காக எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியயையும் தாண்டி தனிப்பட்ட நிதியயையும் வழங்கி இந்த விடயங்களை உயிரூட்ட விரும்புகின்றேன் என்று தெரிவித்து இப்பாடசாலைக்கு என்னாலான உதவிகளை செய்து தருகின்றேன் என்றார்.
இச்சந்திப்பில் பாடசாலை அதிபர் எஸ்.எம்.இஸ்மாயில், அதிபர் ஏ.ஹார்தீன், தொழில் நுட்ப உத்தியோகத்தர் ஏ.எம்.சாபி, பிரதி அதிபர் கே.எம்.றிபாஸ், சட்டத்தரணி பாறூக் சாகிப் ஆகியோர் கலந்து கொண்டர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
1 hours ago