2025 ஜூலை 09, புதன்கிழமை

தையல் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

Princiya Dixci   / 2015 மே 05 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ் இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகளுக்கான நிறுவனத்தினூடாக அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கான தையல் பயிற்சி நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வு, சனிக்கிழமை (02) நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு தலைவரும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளருமான எம்.ஏ.சீ நஜீப் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் கௌரவ அதிதியாகவும் விசேட அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம் முபீத் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் அன்வர் முஸ்தபா, மருதமுனை, நாவிதன்வெளி அமைப்பாளர் சித்தீக் நதீர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் எஸ்.எம்.இக்பால் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

அட்டாளைச்சேனை தையல் பயிற்சி நிலையத்தில் 20 பெண்கள் தையல் பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் சமார் ஆறு மாதங்களைக் கொண்டதாக இப்பயிற்சி இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .