Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Gavitha / 2015 மே 06 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பயிற்சிகளை முடித்து வெளியான ஆசிரியர்களுக்கான நியமனம், வெளி மாகாணங்கள், மாவட்டங்களில் வழங்கப்படவுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை (05) கல்வி அமைச்சர் அக்கிலவிராஜ் காரியவசத்தை அவரது அமைச்சில் சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது, கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 1700க்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இருக்கும் இச்சந்தர்ப்பத்தில், கிழக்கில் பயிற்சி முடித்த ஆசிரியர்களை வெளிமாவட்டங்களுக்கு அனுப்பும் முயற்சியை உடனே கைவிட்டு அவர்களுக்குரிய மாவட்டப்பாடசாலைகளிலேயே அவர்களை நியமிக்க வேண்டும் என்று மு.கா குழுவினர், கல்வி அமைச்சரை கேட்டுக்கொண்டனர்.
கிழக்கில் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இல்லை என்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிக்கை சமர்ப்பித்ததன் காரணமாகவே, பயிற்சி பெற்ற ஆசிரியர்களை வெளிமாகாண பாடசாலைகளுக்கு நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுவினரிடம் தெரிவித்தார்.
இதன்போது கல்வி அமைச்சர் அக்கிலவிராஜ், இது சம்மந்தமாக உடனடியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கல்வி அதிகாரிகள், கிழக்கில் ஆளனிப்பற்றாக்குறை உள்ள பாடசாலைகளை தேர்ந்தெடுத்து அங்குள்ள ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட மாவட்டப்பாடசாலைகளிலேயே நியமனங்களை வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.
இச்சந்திப்பில் மு.கா தலைவரும் நகர அபிவிருத்தி அமைச்சருமான றவூப் ஹக்கீம், இராஜாங்க சுகாதார அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர், போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளருமான எஸ்.எல்.முனாஸ் ஆகியோருடன் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.நிஸாம் மற்றும் அமைச்சின் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
28 minute ago
37 minute ago
42 minute ago