2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

வெளி உண்டியலை உடைக்க முயற்சி: உள் உண்டியல் திருட்டு

Princiya Dixci   / 2015 மே 07 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் உண்டியல் நேற்று (06) இரவு திருடப்பட்டுள்ளது.

உண்டியலிருந்த பணம் முழுதும் எடுத்துசெல்லப்பட்டுள்ள நிலையில், உண்டியல் பெட்டி மட்டும் ஆலயத்தின்  பின்புற காணியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆலயத்தில் தங்களுடைய கைவரிசையை காண்பிக்க வந்த திருடர்கள், ஆலயத்தின் உட்புறத்துடன் இணைந்தவாறு ஆலயத்துக்கு வெளியில், செங்கல் கற்களால் கட்டப்பட்டிருந்த உண்டியலை உடைக்க முயற்சித்துள்ளனர்.

அந்த முயற்சி கைகூடாததையடுத்து ஆலயத்தின் கதவை உடைத்துகொண்டு அவர்கள் உட்சென்றுள்ளனர். அங்குள்ள அறையொன்றின் பூட்டை உடைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட இந்த உண்டியல், பூஜை வழிபாடு நேரங்களில் ஆலயத்தின் உள்ளேயே வைத்து பயன்படுத்தப்படும். ஆலயம் பூட்டப்படும் போது அந்த உண்டியல் அறையில்; வைத்து பூட்டப்படும் என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்த அக்கரைப்பற்று பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை, பட்டிநகர் கண்ணகிஅம்மன் ஆலயத்தின் உண்டியலும் நேற்றுமுன்தினம் திருடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X