2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக மது விற்ற 14 பேருக்கு அபராதம்

George   / 2015 மே 07 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அக்கரைப்பற்று திருக்கோவில் பொலிஸ் பிரிவிட்குட்பட்ட  பிரதேசங்களில் சட்டவிரோமாக சாராயம், கள்ளு உட்கட மதுபானங்களை விற்பனை செய்த 14 பேருக்கு 31 ஆயிரம் ரூபாயை தண்டப்பணமாக செலுத்துமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான எச்.எம்.முஹமட் பஸீல், புதன்கிழமை(06) உத்தரவிட்டார்.

மதுவரிதிணைக்களத்தினரால் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுகளிலுள்ள பிரதேசங்களில் நடாத்தப்பட்ட திடீர்சோதனை நடவடிக்கையின்போது சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்து அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்தனர்

வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .