2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

துவிச்சக்கரவண்டி திருடியவருக்கு இரண்டு வருட சிறை

George   / 2015 மே 07 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா 

அக்கரைப்பற்று பிரதேசத்தில் துவிச்சக்கர வண்டி திருடிய நபர் ஒருவருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம்.பஸீல், இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையுடன் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வியாழக்கிழமை(07) தீர்ப்பளித்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியை திருடிய குற்றச்சாட்டின் பேரில் பெப்ரவரி மாதம, குறித்த நபர், அக்கரைப்பற்று பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து வழக்கு நடைபெற்றுவந்த நிலையில் இன்றையதினம், சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவர் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றங்களுக்கு தலா 1,500 ரூபாய் வீதம்  அபராதம் விதிக்கப்பட்டதுடன் இரண்டு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .