2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

துக்க, மகிழ்ச்சி வெளிப்பாட்டுப் பெட்டி அமைக்கும் வேலைத்திட்டம்

Thipaan   / 2015 மே 09 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

சிறுவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான பாடசாலைகளை உருவாக்குவதற்கான ஏற்பாட்டின் ஓர் அங்கமாக பாடசாலைகளில் துக்க, மகிழ்சி உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான துக்க, மகிழ்ச்சி வெளிப்பாட்டுப் பெட்டி (Happy and Sad Box) அமைக்கும் வேலைத்திட்டம் (07) அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்துக்கு அமைவாக அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்துக்குட்பட்ட 12 பாடசாலைகளில் துக்க, மகிழ்ச்சி உணர்வுகளைப் வெளிப்படுத்துவதற்கான பெட்டிகள் அமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை அந்-நூர் மகாவித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சிறுவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான பாடசாலைகளை உருவாக்கும் பொருட்டு தேசிய சிறுவர் பாதுகாப்புகு அதிகார சபை, கல்வி அமைச்சுடன் இணைந்து பாடசாலை மட்ட சிறுவர் பாதுகாப்பு குழுவின் ஊடாக பிரதேச சிறுவர் பாதுகாப்புப் பிரிவனால் இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் எதிர்காலத்தில் மாணவர்களது உணர்வுகளுக்கான தீர்வை பெற்றுக் கொடுக்கவும் அவர்கள் மூலமாக பிரச்சினைகளை வெளிக்கொணரவும் இத்திட்டம் உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மாதாந்தம் இறுதி வெள்ளிக்கிழமைகளில் இந்தப் பெட்டி திறக்கப்பட்டு அதற்கு பொறுப்பான சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், அதிபர், உளவள ஆசிரியர் போன்றோரின் முன்னிலையில் பதியப்பட்டு  பிரச்சினைகள் இனங்காணப்பட்டு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உதவும்.

பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச்.ஏ. றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ், அதிபர் கே.எல்.கிதுறுமுகம்மட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X