Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 மே 09 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று அன்னை சாரதா வித்தியாலயத்தில், 73இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள புதிய இருமாடி கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா அதிபர் பெ.தணிகாசலம் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (08) நடைபெற்றது.
இந்நிகழ்வில், திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன்; பிரதம அதிதியாகவும் பிரதிக்கல்விப் பணிப்பாளர் வி.குணாளன், இராமகிருஷ்ண தேசிய பாடசாலை அதிபர் எம்.கிருபைராஜா உள்ளிட்ட அதிகாரிகள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
அடிக்கல் நாட்டு விழாவின் பின்னர் அதிதிகளால் மரக்கன்றுகளும் நடப்பட்டன.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் ரிஎஸ்இபி (வுளுநு) அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், அமையவுள்ள இக்கட்டடமானது இராமகிருஷ்ண தேசிய பாடசாலையின் ஊட்டல் பாடசாலையாக செயற்படும் இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .