2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஜனாஸா நலன்புரித்திட்ட அலுவலகம் திறந்து வைப்பு

Sudharshini   / 2015 மே 09 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா 

அட்டாளைச்சேனை பிரஜைகள் ஆலோசனைக்கு குழுவின் ஏற்பாடில் 24 மணிநேரம் இயங்கும் ஜனாஸா நலன்புரித்திட்ட அலுவலகம் அட்டாளைச்சேனையில் வெள்ளிக்கிழமை (08) திறந்து வைக்கப்பட்டது.

ஜனாஸா குறித்த செய்தியை மேற்படி அலுவலகத்துக்கு தெரியப்படுத்தி, குறுகிய கால நேரத்தில் ஜனாஸா நல்லடக்கத்துக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிவக்கப்பட்டுள்ளது.

பிரஜைகள் ஆலோசனைக் குழுவின் தலைவர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.எல். அனீஸ், ஜனாஸா நலன்புரி செயற்றிட்டத்தின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சசரின் இணைப்புச் செயலாளருமான எஸ்.எல்.எம். பழீல், உலமாக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .