2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மக்களுக்கு பணிபுரியும் பாக்கியம் அனைவருக்கும் கிடைப்பதில்லை: ஹனீபா

Sudharshini   / 2015 மே 10 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

மக்களுக்கு மகத்தான பணிபுரியும் பாக்கியம் அனைவருக்கும் கிடைப்பதில்லை. கிடைக்கின்ற அந்த சந்தர்ப்பத்தினை மிகவும் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் பயன்படுத்திக் கொள்ளுபவர்களுக்கே இறைவன் உயரிய கூலியினை வழங்குகின்றான் என அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் கிராம உத்தியோகத்தர்களாக கடமையாற்றி ஓய்வுப் பெற்றுச் சென்றவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை கிராம உத்தியோகத்தர்கள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை(09) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

அர்ப்பணிப்போடு சேவையாற்றி ஓய்வுபெறுகின்ற போதே, ஒரு அதிகாரி ஆத்ம திருப்தியடைகின்றான். கடந்த யுத்த சூழ்நிலைகள் மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போதெல்லாம் மிகவும் அர்ப்பணிப்போடும் தியாக சிந்தனையோடும் சேவையாற்றி தற்போது ஓய்வு பெற்றுச் செல்கின்ற எமது கிராம உத்தியோகத்தர்கள் அந்த உயர்ந்த திருப்தியினைகயும் பாராட்டினையும் பெறுவார்கள்

தமக்கு வழங்கப்படுகின்ற பொறுப்புக்களுக்கும் கடமைகளுக்கும் அப்பால் சிறந்த சமூக சிந்தனையுடன் சேவையாற்றிய அதிகாரிகளை மக்கள் என்றும் மறப்பதில்லை.

மேலும், நல்நோக்கத்துடன் சேவையாற்றிய அதிகாரிகள், ஊழியர்களின் பிள்ளைகளும் சமூகத்தில் சிறந்த நற்பிரஜைகளாக உயரிய இடத்தில் இருப்பதையும் நாம் கண்டு வருகின்றோம்.

இவ்வாறானவர்கள் வாழும் போதே வாழ்த்தப்படும் நல்ல பண்புகள் எமது சமூகத்தின் மத்தியில் மங்கி மறைந்து செல்லும் இக்காலகட்டத்தில் இந்நிகழ்வு முக்கியத்துவமிக்கதொன்றாக அமைகின்றது என அவர் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .