2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கட்டுத்துவக்கை காட்டி ரூ.10 இலட்சம், அலைபேசி அபகரிப்பு: ஒருவர் கைது

Thipaan   / 2015 மே 10 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அம்பாறை, லஹுகல பொலிஸ் பிரிவிலுள்ள சின்னக்குளம் பகுதியில் வைத்து கட்டுத்துவக்கு மற்றும் கிறீஸ் கத்தியைக் காட்டி மிரட்டி 9 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணமும் அலைபேசியொன்றும் அபகரிக்கப்பட்டமை சம்பந்தமாக ஒருவர், சனிக்கிழமை (09) கைதுசெய்யப்பட்டுள்ளதாக லஹுகல பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலைப் பிரதேச வாசிகளான அருணாசச்லம் பாஸ்கரன் (வயது 25) மற்றும் மாசிலாமணி சுருகன்னி (வயது 32) ஆகிய இருவரிடமும் கட்டுத் துவக்கு மற்றும் கிறீஸ் கத்திகளைக் காட்டி, சனிக்கிழமை (09) பணம்  அலைபேசி என்பன அபகரிக்கப்பட்டதாக லஹுல பொலிஸில் முறையிடப்பட்டது.

இதுவிடயமாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அபகரிக்கப்பட்ட அலைபேசியை தம் வசம் வைத்திருந்த லஹுகல – உஹனைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹெற்றிராலகே புஞ்சிபண்டா (வயது 49) என்பவரை சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் மூவர் தொடர்புபட்டிருந்ததாக பணத்தையும் அலைபேசியையும் பறிகொடுத்தவர்கள் பொலிஸில் முறையிட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பாக லஹுகல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .