2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இலங்கை மக்கள் காங்கிரஸின் சர்வதேச விவகார பணிப்பாளர் நியமனம்

Gavitha   / 2015 மே 10 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர் எம். முஸ்தபா அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சர்வதேச விவகாரப் பணிப்பாளராகவும்  அக்கட்சியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சனிக்கிழமை (09) வழங்கி வைத்தார்.

சிம்ஸ் கல்லூரியின் பணிப்பாளர் நாயகமும் தொழிலதிபருமான அன்வர் எம். முஸ்தபா தென்கிழக்கு பல்கலைக்கழக பேரவையின் முன்னாள் உறுப்பினராவார்.

சமூக சேவையாளர் அன்வர் எம். முஸ்தபா, அவரது கல்லூரியூடாக தேசிய ரீதியாக சுமார் 3,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசிலினை வழங்கி இலவசமாக கல்வி கற்பதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராக நியமிக்கப்பட்ட அன்வர் எம். முஸ்தபா அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் கட்சியின் இளைஞர் அமைப்புக்களை புனரமைக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றமையும்; குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .