Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 மே 10 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார், கனகராசா சரவணன
'கிழக்கு மாகாண முதலமைச்சருடனான சந்திப்பில் முறையான தீர்வு எட்டப்படவில்லையாயின் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்போம்' என அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ் பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச சபை கலசார மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(10) நடைபெற்ற கலந்துரையாடலில்; இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் பா.தட்சாயணன் தெரிவித்தார்.
'எதிர்வரும் புதன்கிழமை(13) முதலமைச்சரை சந்திப்பதற்கான அழைப்பு கிடைத்துள்ளது. இச்சந்திப்பில் எமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு எட்டப்படாவிடின் மாகாண சபை முன்பாக தீர்வு கிடைக்கும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தில் குதிப்போம்' என்றும் அவர் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த தமிழ் பட்டதாரிகள் சங்கம் நிர்வாக உறுப்பினர் எம்.தீலிபன், கிழக்கு மாகாண சபையினூடாக வழங்கப்படும் நியமனங்களில் தமிழ் பட்டதாரிகள் கடந்த இரண்டு வருடங்காளாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
மாகாண சபையினூடாக 2013ஆண்டில் நடாத்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தருக்கான பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற தமிழ் உத்தியோகத்தர்கள் புறக்கணிக்கப்பட்டு குறைவான புள்ளிகளை பெற்ற ஏனைய சமூகங்களை சேர்ந்த பட்டதாரிகள் பதவியில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்நடவடிக்கையானது இனங்களுக்கிடையே முரண்பாடடைத் தோற்றுவிக்கிறது. ஏனைய மாகாணங்களில் பின்பற்றப்படும் புள்ளிகள் அடிப்படையிலான நியமனங்கள் இங்கும் பின்பற்றப்படவேண்டும் எனவும் திறந்த வெளியில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவேண்டும்' எனவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
2 hours ago
2 hours ago