Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 மே 10 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனராசா சரவணன்
அம்பாறை மாவட்டத்தில் வெசாக் வாரக் காலப்பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் சிகரெட் விற்பனை செய்ய 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்முனை மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி தயாளேஸ்பரகுமார் தெரிவித்தார்.
மதுவரித் திணைக்களத்தின் விசேட வேலைத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவிலான மதுபான வகைகள் மற்றும் சிகரெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மதுவரித் திணைக்கள ஆணையாளர் மல்லமவின் நேரடி வழிகாட்டலின் கீழ், கிழக்கு மாகாண மதுவரித் திணைக்கள உதவி ஆணையாளர் பண்டார தலைமையில், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட மதுவரித் திணைக்கள அத்தியட்சகர் என்.சோதிநாதன் ஆகியோருடன் கல்முனை மதுவரித் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் இணைந்து இந்த சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.
ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 6ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இந்த விசேட வேலைத்திட்டத்தை இவர்கள் மேற்கொண்டிருந்தனர்.
இவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கல்முனை மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி தயாளேஸ்பரகுமார் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .