2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2015 மே 11 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கடந்த 07ஆம் திகதி அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் இடம்பெற்ற அட்டாளைச்சேனை கோட்ட மட்ட பாடசாலை மாணவர்களுக்கான ஆங்கில தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, திங்கட்கிழமை (11) சின்னப்பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் எம்.எச்.அப்துர் றகுமான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை கோட்ட மட்ட ஆங்கில தினப் போட்டியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பெற்ற அல் ஹிக்மா வித்தியாலய மாணவர்களுக்கு இச்சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

இப்போட்டியில் முதலாமிடம் பெற்ற எம்.எச்.ஹிபாவுக்கான சான்றிதழை பாடசாலையின் அதிபர் எம்.எச்.அப்துர் றகுமானும் இரண்டாம், மூன்றாமிடம் பெற்ற வை.எப்.பாத்திமா சஜானா மற்றும் என்.பாத்திமா நதா ஆகியோர்களுக்கான சான்றிதழ்களை ஆங்கல ஆசிரியர்களான ஆர்.எம்.ஜப்ராஸ், எம்.ஐ.சாமிலா ஆகியோர் வழங்கி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .