2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

லொறியை திருடியவருக்கு 4 வருட கடூழிய சிறை

Thipaan   / 2015 மே 12 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

லொறியை திருடி, அந்த லொறியை தன்வசம் வைத்திருந்தமை மற்றும் இலக்கத்தகட்டை மாறினார் ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு 4 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் 20 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 36 மாதங்கள் சிறைத்தண்டனையும் 4,500 ரூபாய் தண்டமும் கல்முனை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள சாய்ந்தமருது பிரதேசத்தில் 2014ஆம் ஆண்டு லொறியொன்றை திருடிய ஒருவரையே குற்றவாளியாக இனங்கண்ட கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜுட்சன், திங்கட்கிழமை (11) மேற்கண்டவாறு தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் வீதி ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரிப்பர் லொறியொன்று 2014ஆம் ஆண்டில் திருடப்பட்டிருந்தது.

இதனையடுத்து, அந்த லொறியை வைத்திருந்த அம்பாறை உகண பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்ததுடன் லொறியையும் மீட்டிருந்தனர்.

சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவருக்கு எதிராக  வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவந்தது.

இந்த நிலையில், கல்முனை நீதவான் நீதிமன்றத்தில், நீதிபதி ஏ.ஜுட்சன் முன்னிலையில் சந்தேகநபர், 11 ஆம் திகதி திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.

லொறியை திருடியவர்  ஏற்கெனவே முன்குற்றம் செய்தவர் எனவும் லொறியை திருடிய குற்றத்துக்;காக,   2 வருட கடூழிய சிறைதண்டனையும்; 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனையும் விதித்த நீதவான்  ஆயிரத்து 500 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிட்டார்.

இதேவேளை, திருடிய லொறியை தன்வசம் வைத்திருந்த குற்றத்துக்காக 2 வருட கடூழிய சிறைத்தண்டனையம்; 10 வருட ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனையும்  ஆயிரத்து 500 ரூபாய் தண்மும் செலுத்துமாறு உத்தரவிட்டார்.

அத்துடன், லொறியின்  இலக்கத் தகட்டை கழற்றி போலியான இலக்கத்தகட்டை மாற்றிய குற்றத்துக்காக ஆயிரத்து 500 ரூபாய் தண்டப்பணமாக செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .