Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 மே 12 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா,கனகராசா சரவணன்
அக்கரைப்பற்று மற்றும் பனங்காட்டுப் பிரதேசங்களில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டில் கைதான ஐவருக்கும் அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் எச்.எம்.முஹம்மது பஸீல் செவ்வாய்க்கிழமை(12) தலா ரூபாய் 10 ஆயிரம் மற்றும் ரூபாய் 15 ஆயிரம் அபராதம் விதித்தார்.
அக்கரைப்பற்று, திருக்கோவில் பிரதேசங்களில் பொலிஸாருடன் இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகள் இணைந்து நேற்று (11) மாலை மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது சட்டவிரோதமாகவும் முறைகேடாகவும் மின்சாரம் பாவித்து வந்த ஐவர் கைதுசெய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களை அக்கரைப்பற்று நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை(12) ஆஜர்படுத்திய போது ஒவ்வொருவரின் குற்றங்களுக்கேற்ப தலா ரூபாய் 10 ஆயிரம் மற்றும் ரூபா 15 ஆயிரம் அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .