Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 மே 12 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
கடல் மற்றும் ஆற்று மண்ணை சட்டவிரோதமாக ஏற்றிய இருவருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல், அபராதம் விதித்துள்ளார்.
கடல் மண்ணை ஏற்றியவருக்கு 25 ஆயிரம் ரூபாவும் ஆற்று மண்ணை ஏற்றியவருக்கு 15 ஆயிரம் ரூபாவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அனுமதிப்பத்திரமில்லாமல் சட்ட விரோதமாக கடல் மணலை ஏற்றிய நபரை, அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்தில் வைத்து பொலிஸார், நேற்று திங்கட்கிழமை(11) காலை கைது செய்தனர்.
கடல் மண்ணை கை உழவு இயந்திரத்திலும் ஆற்று மண்ணை, உழவு இயந்திரத்திலும் இவ்விருவரும் ஏற்றியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .