2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவும்: தவம்

Sudharshini   / 2015 மே 12 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.ஏ.ஸிறாஜ்

பொத்துவில் மற்றும் இறக்காமம் கோட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடின் ஆசிரியர் நியமிக்கப்படும் வரை மக்களை ஒன்று திரட்டி வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்படும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை முதலமைச்சரின் காரியாலயத்தில் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற வெளிமாவட்ட அசிரியர்களை கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நியமிப்பது தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் கூறியதாவது.

கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெற்று தற்போது வெளிமாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை, கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு நியமிக்க கிழக்கு மாகாண முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீண்ட காலமாக அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள பொத்துவில் கோட்ட பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகின்றது. அதேபோன்று சம்மாந்துறை கல்வி வலயத்திலுள்ள இறக்காமம் கல்விக் கோட்டத்திலும் அசிரியர் பற்றாக்குறை காணப்படகின்றது.

தற்போது வழங்கப்படவுள்ள இந்நியமனத்தில் தேவையான ஆசிரியர்களை இரு கல்வி கோட்டங்களிலும் நியமிக்க இச்சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப்பணிப்பாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .