2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வித்தகர் விருதுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

George   / 2015 மே 13 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா 

கிழக்கு மாகாண 2015ஆம் ஆண்டுக்கான வித்தகர் விருதுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக மாகாண கலாசார உத்தியோகத்தர் க.அன்பழகன், செவ்வாய்க்கிழமை(12) தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரினால் வருடா வருடம் வழங்கப்படும் வித்தகர் விருதுக்கு கிழக்கு மாகாணத்திற்குட்பட்ட அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமாலை மாவட்டங்களை சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக சேவையாளர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாமென கலாசார உத்தியோகத்தர் மேலும் கூறினார்.

விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பத்தை தத்தமது பிரதேச செயலாளர் மற்றும் கலாசார உத்தியோகத்தரினால் சான்றிதழ்கள் உறுதிப்படுத்தப்பட்டு ஜுன் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் பணிப்பாளர், பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வியமைச்சு, கிழக்கு மாகாணம், திருகோணமலை எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வித்தகர் விருதுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லையெனவும் விண்ணப்பித்ததை உறுதிப்படுத்தி கடிதம் அனுப்பி வைக்குமாறும் மாகாண கலாசார உத்தியோகத்தர் க.அன்பழகன் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .