2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மையவாடியை ஊடுறுத்து செல்லும் வீதியை அகற்ற நவடிக்கை

Sudharshini   / 2015 மே 13 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.ஏ.ஸிராஜ்

பொத்துவில் 4ஆம் பிரிவு ஜலால்தீன் சதுக்கத்தில் அமைந்திருக்கும் மையவாடியை ஊடறுத்து செல்லும் புதிய கிறவல் வீதியை உடனடியாக மூடுவதுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொத்துவில் பிரதேச சபையின் உதவித்தவிசாளர் ஏ.எம்.தாஜீதீன் தெரிவித்தார்.

இப்பாதையை அகற்றக்கோரி பிரதேச மக்களால்  ஆர்ப்பாட்டமொன்று அண்மையில் மையவாடி முன் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை (12) கருத்து தெரிவிக்கையிலலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார.;
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்.

கடந்த மூன்று மாதங்களாக பொத்துவில் பிரதேச சபை அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக ஒவ்வொரு பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் அபிவிருத்தித்திட்டங்களுக்காக தலா இரண்டு இலட்சம் ரூபாய் வீதம் சபையினால் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், மக்களின் வேண்டுகோளுக்கமையவே இப்பாதையை அமைத்துள்ளார். மேலும், குறிப்பித்த பாதை பொது மக்களின் பாவனைக்காகவும் விடப்பட்டுள்ளது

இப்பாதையினை பெண்கள் உட்பட பலரும் தமது போக்குவரத்துக்கு பயன்படுத்துவதுடன் ஆட்டோ மோட்டார் வண்டிகள் கனரக வாகனங்களும் இப்பாதையினால் பயணிக்கின்றனர்.

மையவாடி இங்கு இருப்பதனால் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு இவ்வீதி அமைப்பு பிழையானதாகும். இவ்வீதியினை அமைப்பதற்கு பிரதேச சபை அனுமதி வழங்கி இருப்பதையிட்டு நான் கவலை அடைகின்றேன். இவ்வீதிக்கான அனுமதி வழங்கப்பட்ட அமர்வில் நான் பிரசங்கமாகவில்லை.  இருந்திருந்தால் பாதை அமைப்பு விடயத்தை கைவிடுமாறு வேண்டி  எதிர்த்திருப்பேன்.

எவ்வாறாயினும் இப்பிரதேச மக்களின் கோரிக்கைகமைவாக குறிப்பிட்ட பாதை அகற்றப்படும்; என அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .