Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 மே 13 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் எடுத்த முயற்சியின் முதல் நிகழ்வாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் பொதுமக்களின் சகல பிரச்சினைகளுக்கும் உடனடியான தீர்வைப் பெற்றுக்கொடுக்க நாளை வியாழக்கிழமை (14) காலை 9.00 மணியிலிருந்து மாலை 04.00 மணிவரை மாபெரும் நடமாடும் சேவை இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்புச் செயலாளர் எஸ்.எல்.முனாஸ் தெரிவித்தார்.
இந்த நடமாடும் சேவையில் காணி, விவசாயம், வீதி, வடிகான், வீடமைப்பு, பாடசாலை, ஆசிரியர்கள், மாணவர்கள், முதியோர், இளையோர், கிராம அபிவிருத்தி சங்கங்கள் என்று பல பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம்.
குறிப்பிட்ட இந்நடமாடும் சேவையில் கிழக்கு மாகாண சகல அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் சகல திணைக்களங்க அதிகரிகள் கலந்துகொண்டு பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைப் பெற்றுக்கொடுக்கவுள்ளனர்.
மேலும், அம்பாறை மாவட்டத்துக்கான நடமாடும் சேவை, கல்முனை மற்றும் அம்பாறையில் மிக விரைவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சரின் ஊடக இணைப்புச் செயலாளர் எஸ்.எல்.முனாஸ் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .